Tuesday 7 May 2013

ஊட்டி சுற்றுலா (பகுதி -1)


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பகிர்ந்து கொண்ட கல்லூரிக்கால நினைவுகளுக்குப்பின்னர் இதோ... ஐந்து மாதங்கள் கடந்தோடி விட்டன.   கிருஷ்ணன்கூட அவனுக்கே உரித்தப்பாணியில் ..என்ன தம்பி? இன்னமும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டவில்லையா?....... என்று சென்றமுறை பகிர்ந்து கொண்ட சைக்கிள் பயணத்திற்கு பிறகு பெரிய தொய்வு ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தான்.  இரத்த ஒட்டத்துடன் கலந்துவிட்ட கல்லூரி கால நினைவுகளை ஆயுள் முழுவதும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஆழமான நம்பிக்கைத்தான் அவ்வப்பொழுது எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிக்கு காரணம்.  

கிருஷ்ணா விஷயத்தில் ஒரு வருத்தமான ஒரு நிகழ்வு என்னவென்றால் அவனும் எங்களுடன் N.C.C யில் இருந்திருக்கிறான் என்பதையும்

Tuesday 6 November 2012

NCC - சைக்கிள் சவாரி!!

பள்ளிப்பருவத்தில் NCC மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் மிடுக்கான தோற்றத்தில் ரொம்பவும் கவரப்பட்டிருக்கிறேன். அவர்களின் சுறுசுறுப்பான செயல்முறைகள் கட்டுக்கோப்பான பயிற்சிகளை பார்க்க வசீகரமாகயிருக்கும். காக்கி உடுப்பில் விரைப்பாக அவர்கள் நடந்து செல்வதைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. NCC யில் சேரனுமென்ற ஆசை அளவுகடந்திருந்தும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காததால் அது கைவரப்பெறாத கனவாகவாகவேயிருந்தது.

Tuesday 2 October 2012

ரத்த தானம்!!

கல்லூரியில் படிக்கும் காலங்களில் பணம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.அவற்றின் முக்கியத்துவமும் அவ்வளவாக தெரியவில்லை.காலை எழுந்தவுடன் துடிப்பு...! பின்பு கலகலப்பாயிருக்கும் எங்கள் கல்லூரி.... மாலை முழுவதும் அதன் நினைப்பு...! என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் எதிர்காலம் கடந்தகாலம் என்பதெல்லாம் தேவையற்ற சமாச்சாரங்களாக அப்போது தோன்றியது. காலையுணவு வீட்டில் முடிந்துவிடும்.பஸ் பாஸ் இருப்பதால் போய் வருவதற்கான பயண செலவு கிடையாது.  மத்தியானத்திற்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கொண்டுவந்துவிடுவதால் கேண்டின் செலவு கிடையாது.

Wednesday 19 September 2012

நட்பு விதை!!


நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களை அமெரிக்கா மக்கள் எப்படி பேட்டி மேல் பேட்டி எடுத்திருப்பார்களோ ..? அந்தளவிற்கு முதன்முதல் மாணவிகள் இல்லத்திற்கு விஜயம் செய்த குழந்தைவேலுவிடம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு விபரங்களைக் குடைந்தெடுத்தோம். அந்தசமயத்தில் அவன் எங்களுக்கு ஒரு கொலம்பஸாகவே.... தெரிந்தான்..!

Monday 10 September 2012

நட்பின் அறிமுகம்!!


கல்லூரி காலங்களில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் என் நண்பர்களை டேய்....., போடா......, வாடா.......... என்று ஒருமையில் அழைப்பதுதான் ரொம்பப்பிடிக்கும். அப்படி அழைக்கும்போது அந்நியோன்னியமாக நெருக்கமாக உரிமையாக உணர முடிகிறது. ஆகவே அப்பவும் சரி, இப்பவும் சரி, நட்பின் விளிப்பை ஒருமையில் அழைத்தே........... களித்திருக்கிறேன். தோழிகளை வா... போ... என்ற ரீதியில் அழைத்து பழகியிருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் அவர்... இவர்..... என்று மரியாதையாக என்னை குறிப்பிடும் போதும் விளிக்கும் போதும் ஒவ்வாமையாக உணர்ந்திருக்கிறேன்.

அன்று அறியாதவன் - இன்று .........


எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.

தொடர்ந்து ஆதரவை விரும்பும்....

அன்வர் உசேன்.

Saturday 1 September 2012

முடிசூடாமன்னன் நாகு!!

எங்கள் கல்லூரிக்காலங்களில் பெரும்பாலும் நாங்கள் ஆசிரிய பெருந்தகைகளை அவ்வளவாக பகைத்துக்கொள்ளவில்லை. அதிகமாக கலாட்டா, கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாகவே கடைசி வரையிருந்தது. எங்கள் வகுப்பில் மாணவிகள் மெஜாரிட்டியாகயிருந்த காரணத்தால் பேராசிரியர்களெல்லாம் நிம்மதியாகவே வகுப்பெடுத்து சென்றனர். என்னதான் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் வகுப்பு முடிந்து ஆசிரியர் சென்றபின்னர் தான் விழுந்து விழுந்து சிரிப்போம்.  ஆகவே பெரும்பாலான பேராசிரியர்களின் வகுப்பு நேரங்களெல்லாம் சர்வ நிசப்தமாகவேயிருக்கும்.
Link