இதுவரை கடந்து வந்த
வாழ்வின் வழிகளில் நான் மிகமிக சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் வாழ்ந்த காலங்கள்
நிச்சயமாக மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த காலங்கள் தான்.
ப்ளஸ் 2 பள்ளி பொதுஇறுதி
தேர்வு எழுதி முடித்ததும் அப்பாடா தொல்லை விட்டது என்ற எண்ணத்துடன் மதுரை வீதிகளை
நண்பர்கள் சகிதம் உலா வந்து கொண்டிருந்தேன்.
எனது பள்ளித்தோழனான சீனிவாசனுடன் சுற்றாத இடங்களேயில்லை எனலாம்!! எவ்வளவு நாள் தான் சுற்றிக்கொண்டேயிருக்க
முடியும்? ப்ளஸ் 2 ரிசல்ட் வருவதற்கான தினம் நெருங்க நெருங்க இதயத்தின் ஓசை
காதுகளுக்கு அருகில் கேட்க ஆரம்பித்துவிட்டது.