என்னைப் பற்றி


இது என்னுடைய ப்ளாக் என்பதால் என்னைப்பற்றி சில வார்த்தைகள். நம்மைப்பற்றி நாமே அறிந்திருந்தாலும் அதை எழுத்தில் வடிப்பது என்பது சற்று கடினம். இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்னைப்பற்றி நான் நினைத்திருப்பதும் நீங்கள் நினைத்திருப்பதும் வேறுபடாது என்ற நம்பிக்கையில். இதோ நான்.

வாழ்க்கையை முழுமையாக வாழ நினைக்கும் / துடிக்கும் இளைஞன் நான்.

என்னுடைய விருப்பங்கள் பல: படிப்பது, எழுதுவது, கனவு காண்பது, பேசுவது, கேட்பது. 

பிடித்தவைகள்: சூரியோதயம், நிலவொளி, முகத்தில் தவழும் இசை, கடலிலிருந்து வரும் காற்றின் மணம், கரு மேகங்கள், உறக்கம் வராத போது எண்ணங்களோடு உலா செல்வது, வசந்தகால பூக்கள், கோடை மழை, இலையுதிர்காலம், குளிர்ந்த பனிக்காலம். தூங்கவும் பிடிக்கும், விழித்திருக்கவும் பிடிக்கும், தனிமை பிடிக்கும், உறவுகள் பிடிக்கும், கிராமத்தின் அமைதி பிடிக்கும், நகரத்தின் ஓசை பிடிக்கும், இயற்கை பிடிக்கும், நல்ல உணவு பிடிக்கும். எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கப் பிடிக்கும்.

எழுத்து எனது கனவு. எழுத்துலக மேதை ‘சுஜாதா’வின் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்ச்சியை எழுப்பியது. எனது மானசீக குருவாகிய அவரை  நினைத்துக்கொண்டுதான் எழுத முயற்சிக்கிறேன். உள்ளுவது உயர்வுள்ளல்.

இறைவா ...! கனவு மெய்ப்பட வேண்டும்.

Link