பள்ளிப்பருவத்தில் NCC மாணவர்களின் உடை
மற்றும் அவர்களின் மிடுக்கான தோற்றத்தில் ரொம்பவும் கவரப்பட்டிருக்கிறேன்.
அவர்களின் சுறுசுறுப்பான செயல்முறைகள் கட்டுக்கோப்பான பயிற்சிகளை பார்க்க
வசீகரமாகயிருக்கும். காக்கி உடுப்பில் விரைப்பாக அவர்கள் நடந்து செல்வதைப்
பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. NCC யில் சேரனுமென்ற ஆசை அளவுகடந்திருந்தும் அதற்கான முயற்சிகள்
எதுவும் எடுக்காததால் அது கைவரப்பெறாத கனவாகவாகவேயிருந்தது.
Tuesday, 6 November 2012
Tuesday, 2 October 2012
ரத்த தானம்!!
கல்லூரியில் படிக்கும் காலங்களில் பணம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.அவற்றின் முக்கியத்துவமும் அவ்வளவாக
தெரியவில்லை.காலை எழுந்தவுடன் துடிப்பு...!
பின்பு கலகலப்பாயிருக்கும் எங்கள் கல்லூரி.... மாலை முழுவதும் அதன் நினைப்பு...!
என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் எதிர்காலம் கடந்தகாலம் என்பதெல்லாம் தேவையற்ற
சமாச்சாரங்களாக அப்போது தோன்றியது. காலையுணவு வீட்டில் முடிந்துவிடும்.பஸ் பாஸ் இருப்பதால் போய் வருவதற்கான பயண செலவு
கிடையாது. மத்தியானத்திற்கான சாப்பாட்டை
டிபன் பாக்ஸில் கொண்டுவந்துவிடுவதால் கேண்டின் செலவு கிடையாது.
Wednesday, 19 September 2012
நட்பு விதை!!
நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை அமெரிக்கா மக்கள் எப்படி பேட்டி மேல் பேட்டி
எடுத்திருப்பார்களோ ..? அந்தளவிற்கு முதன்முதல் மாணவிகள் இல்லத்திற்கு விஜயம்
செய்த குழந்தைவேலுவிடம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு விபரங்களைக் குடைந்தெடுத்தோம்.
அந்தசமயத்தில் அவன் எங்களுக்கு ஒரு கொலம்பஸாகவே.... தெரிந்தான்..!
Monday, 10 September 2012
நட்பின் அறிமுகம்!!
கல்லூரி காலங்களில்
மட்டுமல்லாமல் எப்பொழுதும் என் நண்பர்களை டேய்....., போடா......, வாடா..........
என்று ஒருமையில் அழைப்பதுதான் ரொம்பப்பிடிக்கும். அப்படி அழைக்கும்போது அந்நியோன்னியமாக
நெருக்கமாக உரிமையாக உணர முடிகிறது. ஆகவே அப்பவும் சரி, இப்பவும் சரி, நட்பின்
விளிப்பை ஒருமையில் அழைத்தே........... களித்திருக்கிறேன். தோழிகளை வா... போ...
என்ற ரீதியில் அழைத்து பழகியிருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் அவர்... இவர்.....
என்று மரியாதையாக என்னை குறிப்பிடும் போதும் விளிக்கும் போதும் ஒவ்வாமையாக
உணர்ந்திருக்கிறேன்.
அன்று அறியாதவன் - இன்று .........
எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.
தொடர்ந்து ஆதரவை விரும்பும்....
அன்வர் உசேன்.
Saturday, 1 September 2012
முடிசூடாமன்னன் நாகு!!
எங்கள் கல்லூரிக்காலங்களில்
பெரும்பாலும் நாங்கள் ஆசிரிய பெருந்தகைகளை அவ்வளவாக பகைத்துக்கொள்ளவில்லை. அதிகமாக
கலாட்டா, கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாகவே கடைசி வரையிருந்தது. எங்கள் வகுப்பில்
மாணவிகள் மெஜாரிட்டியாகயிருந்த காரணத்தால் பேராசிரியர்களெல்லாம் நிம்மதியாகவே
வகுப்பெடுத்து சென்றனர். என்னதான் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் வகுப்பு
முடிந்து ஆசிரியர் சென்றபின்னர் தான் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆகவே பெரும்பாலான பேராசிரியர்களின் வகுப்பு
நேரங்களெல்லாம் சர்வ நிசப்தமாகவேயிருக்கும்.
Monday, 27 August 2012
பேராசிரியர்களுடன் நாங்கள்!!
பேராசிரியை சாந்தா
மேடம் எப்படி எங்களுக்கு ஆரம்பகாலங்களில் பீதியைக் கொடுத்தார்களோ? அதற்கு மாற்றமாக
பேராசிரியர்களான பாலகிருஷ்ணன் சார் மற்றும் மோகன் சார் அவர்கள் மிகவும் நட்புடன்
பழகியிருந்தார்கள். பாலகிருஷ்ணன் சார் மிக மிக அதிர்ஷ்டசாலி...! அவர் நடத்திய பாடங்களெல்லாமே
easy ஆகவும் interesting ஆகவும் இருந்ததால்
அவர் எடுக்கும் வகுப்புகளெல்லாம் ரொம்ப ஜாலியாய் கலகலப்பாயிருக்கும்.
Friday, 24 August 2012
நன்றி
இந்த
தொடரில் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும், என் சிறு சிறு தவறுகளை
வலிக்காமல் தலையில் குட்டி தெரிவிக்கும், என்னை ஊக்குவிக்கும் வகையில் நல்ல
நகைச்சுவையுடன் கூடிய comment களை அள்ளிக் குவிக்கும் எனது அன்பு நண்பர்களுக்கு எனது
நன்றியை கூறிக்கொண்டு அவர்களுடைய comment களை (அத்தியாய வாரியாக) இங்கே பிரசுரிக்கிறேன்.
பி.கு. :
(இவை alumni blog இல் பிரசுரிக்கப்பட்டவை)
Thursday, 16 August 2012
கல்லூரி களை கட்டுதல்!!
கல்லூரி வாழ்க்கையின் இனிமைகளை பலமுறை
நண்பர்களுடன் பேசியிருக்கிறேன்.
பகிர்ந்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக
இப்போதுதான் எழுத்தில் பதிவு செய்கிறேன். அதனால் ஒரு வரலாற்றுப்பதிவு போல்
கோர்வையாக சம்பவங்கள் நடந்த காலவரிசைப்படி எழுதவது என்பது கொஞ்சம் கடினமாகயுள்ளது.
மேலும் பிடித்த விஷயங்கள் தானே உடனே ஞாபகத்திற்கு வரும். ஆகவே
Sunday, 5 August 2012
ஒரு புதிய திருப்பம்!!
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பசுமை
நிறைந்த நினைவுகளே ! என்ற பாடலில் ஓர் அருமையான வரி வரும் “வரவறியாமல் செலவுகள்
செய்து மகிழ்ந்திருந்தோமே“ ஆனால் எங்கள் விஷயத்தில் வரவுமில்லாமல் செலவுமில்லாமல்
மகிழ்ந்திருந்தோம். ஆம்! அந்த மூன்று
வருடங்களும் நட்பு நதியில் நீந்தி பிரிய சாலையில் நடந்து பாச பயணமாகவே கழிந்தது.
கடுப்பு அடிக்கும் நண்பர்கள் இருந்தும்
விடுப்பு எடுக்க விருப்பம் வந்ததில்லை!
படிப்பு எட்டாத உயரத்திலிருந்தும்
கல்லூரிக்கு வந்து போக விரும்பும் துடிப்பு மட்டும் குறையவேயில்லை...........!
Sunday, 29 July 2012
என் கனவுக்கல்லூரி!
இதுவரை கடந்து வந்த
வாழ்வின் வழிகளில் நான் மிகமிக சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் வாழ்ந்த காலங்கள்
நிச்சயமாக மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த காலங்கள் தான்.
ப்ளஸ் 2 பள்ளி பொதுஇறுதி
தேர்வு எழுதி முடித்ததும் அப்பாடா தொல்லை விட்டது என்ற எண்ணத்துடன் மதுரை வீதிகளை
நண்பர்கள் சகிதம் உலா வந்து கொண்டிருந்தேன்.
எனது பள்ளித்தோழனான சீனிவாசனுடன் சுற்றாத இடங்களேயில்லை எனலாம்!! எவ்வளவு நாள் தான் சுற்றிக்கொண்டேயிருக்க
முடியும்? ப்ளஸ் 2 ரிசல்ட் வருவதற்கான தினம் நெருங்க நெருங்க இதயத்தின் ஓசை
காதுகளுக்கு அருகில் கேட்க ஆரம்பித்துவிட்டது.
Subscribe to:
Comments (Atom)
Link